என் மலர்

  தமிழ்நாடு

  தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை- அண்ணாமலை
  X

  தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை- அண்ணாமலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

   மதுரை:

   பசும்பொன் முத்துராம லிங்கதேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று மதுரை வந்தார். அவர் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாநில நிர்வாகி எச்.ராஜா, மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

   பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

   பசும்பொன் முத்துராம லிங்கதேவர் பிறந்து வளர்ந்த மதுரை மண்ணில் அவருக்கு மரியாதை செய்வது பெருமையை தருகிறது. பசும்பொன் தேவர் திருமகனார் அற்புதமான பல்வேறு கருத்துகளை விட்டுச் சென்று உள்ளார்.

   அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகி விட்டனர். தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

   எனவே தேவர் மீண்டும் அவதரிக்க வேண்டும். தமிழ் மண் எப்படி இருக்க வேண்டும்? என்று அவர் நினைத்தாரோ அதனை பாரதிய ஜனதா நிச்சயமாக நனவாக்கும்.

   இவ்வாறு அவர் கூறினார்.

   Next Story
   ×