என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓசூரில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலை மறியல்
    X

    ஓசூரில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலை மறியல்

    • கே.பி. முனுசாமியின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் மறியலில் இணைந்துள்ளனர்.
    • சம்பவ இடத்தில் திமுகவினரும் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பது யார் என்பதில் திமுக - அதிமுக இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கே.பி.முனுசாமி 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.

    கே.பி. முனுசாமியின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் மறியலில் இணைந்துள்ளனர்.

    சம்பவ இடத்தில் திமுகவினரும் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×