என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாயமான பூனையை கண்டுபிடித்தால் சன்மானம்- புதுவை நகர பகுதியில் காணவில்லை போஸ்டர்
- புதுவை நகரப்பகுதியில் காணவில்லை என்ற போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.
- கடந்த 4 ஆண்டுகளாக பூனை வீட்டை விட்டு வெளியேறியது இல்லை.
புதுச்சேரி:
புதுவை நகரப்பகுதியில் காணவில்லை என்ற போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.
காரணம் காணாமல் போனது பூனை.இந்த போஸ்டரை காந்திநகர் வேளாண் தோட்டத்தை சேர்ந்த ராமன் என்பவர் ஓட்டி உள்ளார். அதில் "குட்டூ" என அழைக்கப்படும் தனது பூனையை 3-ந் தேதி முதல் காணவில்லை.
பூனையை பற்றி தகவல் தெரிவித்தால் பணம் சன்மானமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு தனது செல்போன் எண்ணையும் ராமன் இணைத்துள்ளார். இதுகுறித்து பூனை உரிமையாளர் ராமன் கூறியதாவது:-
சென்னையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக இருந்த இந்தப் பூனையை தனது மகள் புதுவைக்கு கொண்டு வந்து வளர்த்து வந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக பூனை வீட்டை விட்டு வெளியேறியது இல்லை.
கடந்த 3-ந் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தில் ஒருவர் காணாமல் போனது போல் செல்ல பிராணியான பூனை வீட்டில் இல்லாததால் அனைவரும் வருத்தத்தில் இருக்கிறோம்.
இவ்வாறு ராமன் கூறினார்.
செல்ல பிராணியை காணவில்லை என ராமன் ஒட்டியுள்ள போஸ்டரை பார்த்த பலரும் அதனை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி பூனையை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி வருகின்றனர்.






