என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரச்சலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 9 விநாயகர் சிலைகள் அகற்றம்
    X
    அரச்சலூர் பகுதியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

    அரச்சலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 9 விநாயகர் சிலைகள் அகற்றம்

    • விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
    • விநாயகர் சிலைகளை அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கரைத்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரச்சலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

    உரிய அனுமதி பெறாமல் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அரச்சலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், இந்து மக்கள் கட்சி சார்பில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட 9 சிலைகளை அகற்றினர்.

    பின்னர் விநாயகர் சிலைகளை அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கரைத்தனர். இதுகுறித்து தெரிய வந்ததும் அந்த பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியினர் அங்கு திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×