என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிதம்பரத்தில் இன்று படகு கவிழ்ந்தது- நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள்
- பரங்கிபேட்டை முகத்துவாரம் பகுதியில் சென்றபோது பேரலை எழும்பியது. இதில் படகு திடீரென நடுகடலில் கவிழ்ந்தது.
- பரங்கிபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள சின்னூர்தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் கேசவராஜ். இவரது தலைமையில் இன்று காலை மீனவர்கள் 5 பேர் நாட்டு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது பரங்கிபேட்டை முகத்துவாரம் பகுதியில் சென்றபோது பேரலை எழும்பியது. இதில் படகு திடீரென நடுகடலில் கவிழ்ந்தது. அப்போது 6 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்தனர். உயிர்பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்தவர்கள் 6 பேரையும் மீட்டனர். இது குறித்து பரங்கிபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






