search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 ஆயிரம் காலி இடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர்கள் பேரணி போராட்டம்
    X

    5 ஆயிரம் காலி இடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர்கள் பேரணி போராட்டம்

    • தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி போராட்டம் இன்று நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி போராட்டம் இன்று நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

    சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் ஊழியர்கள் திரண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து ஊழியர்கள் குவியத்தொடங்கினர்.

    முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவிகளை அனுமதிக்கவும், 58 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பவும் நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளை அவுட் சோர்சிங் முறைக்கு விடக் கூடாது. 1.12.2019 முதல் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் ஐ.என்.டி.யு.சி. சேவியர், எச்.எம்.எஸ்.சுப்பிரமணி, தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் கு. பாவலன் உள்ளிட்ட 11 சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். மின்வரியத்தில் 86 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிரார்கள். இவர்களின் பல்வேறு கோரிக்கைகளின் மீது வாரிய நிர்வாகம் பலமுறை அழைத்து பேசி முடிவு பெறாமல் உள்ளது.மின்வாரிய பணியாளர்கள் மத்தியில் தமிழக அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி விடும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×