என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காசிமேடு கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய 350 கிலோ ராட்சத சுறா மீன்
- 3 மீனவர்கள் வலையில் சிக்கிய மீனை இழுக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர்.
- மீனவர்கள் 10 பேரும் சேர்ந்து வலையை கஷ்டப்பட்டு படகிற்குள் இழுத்தபோது அதில் ராட்சத சுறாமீன் சிக்கி இருந்தது தெரிந்தது.
காசிமேடு:
காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் 10 பேர் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றுள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 3 மீனவர்கள் வலையில் சிக்கிய மீனை இழுக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து மீனவர்கள் 10 பேரும் சேர்ந்து வலையை கஷ்டப்பட்டு படகிற்குள் இழுத்தபோது அதில் ராட்சத சுறாமீன் சிக்கி இருந்தது தெரிந்தது.
பின்னர் காசிமேடு கரைக்கு திரும்பிய மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாவை எடை போட்டு பார்த்தபோது சுமார் 350 கிலோ இருந்தது. இந்த மீன் ரூ.75 ஆயிரம் வரை விலை போகும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
Next Story






