search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
    X

    காஞ்சிபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

    • ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ஆண்கள் 1,79,657 பேர், பெண்கள் 1,89,828 பேர் மாற்று பாலினத்தவர்கள் 60 பேர் என மொத்தம் 3,69,545 பேர் உள்ளனர்.
    • காஞ்சிபுரம் தொகுதியில் ஆண்கள் 149570 பேர், பெண்கள் 1,60,088 பேர், மாற்றுபாலினத்தவர்கள்22 பேர் என மொத்தம் 3,09,680 பேர் உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கலைசெல்வி மோகன் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். இதில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா தேர்தல் அலுவலர் புண்ணியகோட்டி தாசில்தார் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையம் புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1398 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 13 லட்சத்து 24 ஆயிரத்து 581 வாக்களர்கள் உள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக ஆலந்தூர் தொகுதியில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 758 வாக்களார்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 615 பேர், பெண்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 86 பேர், மாற்றுபாலினத்தவர்கள் 57 பேர் உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ஆண்கள் 1,79,657 பேர், பெண்கள் 1,89,828 பேர் மாற்று பாலினத்தவர்கள் 60 பேர் என மொத்தம் 3,69,545 பேர் உள்ளனர். உத்திரமேரூர் தொகுதியில் ஆண்கள் 127960 பேர், பெண்கள்137595 பேர், மாற்று பாலினத்தவர்கள் 43 பேர் என மொத்தம் 2,65,598 பேரும், காஞ்சிபுரம் தொகுதியில் ஆண்கள் 149570 பேர், பெண்கள் 1,60,088 பேர், மாற்றுபாலினத்தவர்கள்22 பேர் என மொத்தம் 3,09,680 பேர் உள்ளனர்.

    Next Story
    ×