search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாம்பரம் அருகே ஒரே கிராமத்தில் 18 குற்றவாளிகள்- புதியதாக புறக்காவல் நிலையம் அமைத்து போலீஸ் கண்காணிப்பு
    X

    தாம்பரம் அருகே ஒரே கிராமத்தில் 18 குற்றவாளிகள்- புதியதாக புறக்காவல் நிலையம் அமைத்து போலீஸ் கண்காணிப்பு

    • ஒரே கிராமத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் 18 குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தது.
    • நடுவீரப்பட்டில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ளது நடுவீரப்பட்டு கிராமம். சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர தூரத்தில் உள்ளது. இப்பகுதியை சுற்றி அதிக அளவில் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடந்து வந்தன.

    இது தொடர்பாக போலீசார் ஆய்வு செய்த போது நடுவீரப்பட்டு பகுதியில் மட்டும் ஒரே கிராமத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் 18 குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தது. அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதும் சிரமம் ஏற்பட்டது.

    தொழிற்சாலைகள், கல்லூரிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

    அதன்படி நடுவீரப்பட்டில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.

    இங்கு 4 போலீசார் ஷிப்டு முறையில் பணியாற்றுகிறார்கள். மேலும் அப்பகுதியை சுற்றிலும் கூடுதல் கண்காணிப்பு கேமிராக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, நடுவீரப்பட்டு பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இங்கு மட்டும் 18 தொடர் குற்றவாளிகள் உள்ளனர்.

    மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் எ்ணணிக்கையும் அதிகரித்து வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது' என்றார்.

    Next Story
    ×