என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மணிமங்கலம் அருகே ஓய்வுபெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
- மணிமங்கலம் அருகே உள்ள கரசங்கால் பகுதியில் வசிப்பவர் பால் (வயது 84).ஓய்வு பெற்ற விஞ்ஞானி.
- ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
மணிமங்கலம் அருகே உள்ள கரசங்கால் பகுதியில் வசிப்பவர் பால் (வயது 84).ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர்.
இந்தநிலையில் பால், தனது வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் வீட்டில் உள்ள பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை.
இதுகுறித்து அவர் மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். நகை கொள்ளை போன வீட்டில் விலை உயர்ந்த 2நாய்கள் காவலுக்கு உள்ளன. மேலும் வீட்டின் கதவு, பீரோ உடைக்க படவில்லை என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பால் குடும்பத்தாரிடம் முதல் கட்டமாக விசாரணையை தொடங்கி உள்ளோம் என்றனர். ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






