என் மலர்
தமிழ்நாடு

பழவேற்காட்டில் விநாயகர் சிலை கரைக்கப்படும் இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
- விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் நாளையும் மற்றும் 4-ந் தேதியும் கரைக்கப்படுகிறது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.
பொன்னேரி:
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொன்னேரி, மீஞ்சூர் ஜனப்ப சத்திரம், தச்சூர், திருப்பாலைவனம் மெதுர் பழவேற்காடு காட்டூர், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன.
இந்த சிலைகள் பழவேற்காடு கடலில் நாளையும் மற்றும் 4-ந் தேதியும் கரைக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் தடுப்பு அமைப்பு ரோந்து பணியில் ஈடுபடுவது, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பது, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், கடலில் பாதுகாப்பிற்காக, மீனவர்கள் படகுடன் தயார் நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை செய்தார்.
டி.எஸ்.பி. சாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.