search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்கபட வேண்டும்- அமைச்சர் பொன்முடி
    X

    விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு விஐடி வேந்தர் விசுவநாதன் நினைவு பரிசு வழங்கினார். 

    மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்கபட வேண்டும்- அமைச்சர் பொன்முடி

    • இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
    • பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனை மேம்படுத்த தொழில்துறை 4.0 திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. நிகழ்ச்சிக்குஅமைப்பின் தலைவரும் வி.ஐ.டி. வேந்தருமான விசுவநாதன் தலைமை தாங்கினார்.

    கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் நடத்தும் இந்த கருத்தரங்கு பயனுள்ளது.

    அனைத்து மாநிலங்களையும் அவர்கள் கல்வி கொள்கையை பின்பற்ற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் கல்வி தரத்தை உயர்த்திக் கொள்ள உரிமை வழங்கபட வேண்டும்.

    பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனை மேம்படுத்த தொழில்துறை 4.0 திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

    புதிய கல்வி கொள்கையில் ஒரு சில வரவேற்க தக்க நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதில் நுழைவு தேர்வு உள்ளிட்ட பல முடிவுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

    3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நுழைவு தேர்வு வைத்தால் அவர்கள் எவ்வாறு எழுத முடியும். அனைத்து மாநிலங்களுக்கும் தங்களுக்கென தனி கல்வி கொள்கை வைத்துள்ளது. மாநிலங்கள் ஊக்கப்படுத்த பட வேண்டும்,அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

    பூனை செல்வதற்கு ஒரு ஓட்டை எலி செல்வதற்கு ஒரு ஒட்டையா என முன்னாள் முதல்வர் அண்ணாவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி எங்களுக்கு 2 மொழிகள் போதும். மூன்றாவதாக ஒரு மொழியை திணிக்ககூடாது.

    இது தொடர்பாக ஏஐசிடிஇ தலைவருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    அதை தொடர்ந்து ஏஐசிடிஇ தலைவர் சீதாராம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உயர்கல்வியில் கொண்டு வரப்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடினோம்.

    தேசிய கல்வி கொள்கையின் மூலம் உயர்கல்வியில் தரத்தை உயர்த்துவது தான் நோக்கம்.

    கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி வட்டார மொழிகளில் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம்.

    வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளை தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து தொடர்பு ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்..

    தமிழ்நாட்டில் உள்ள சில தரமற்ற கல்லூரிகளை மூடுவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். உடனடியாக முடிவெடுக்க முடியாது என்றார்.

    விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×