என் மலர்

    தமிழ்நாடு

    எச்சரித்த பிறகும் மீண்டும் அட்டகாசம்- ரூட் தல மாணவர்களை கைது செய்ய போலீஸ் முடிவு
    X

    எச்சரித்த பிறகும் மீண்டும் அட்டகாசம்- 'ரூட் தல' மாணவர்களை கைது செய்ய போலீஸ் முடிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ‘ரூட் தல’ மாணவர்களை எச்சரித்தாலும் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
    • உறுதிமொழி பத்திரத்தை மீறும் மாணவர்களை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்து உள்ளோம்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் பஸ்கள் மற்றும் ரெயில்களில் ஏராளமான மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகிறார்கள்.

    குறிப்பாக அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் பஸ், ரெயில்களில் சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு வந்து செல்கிறார்கள். பஸ் மற்றும் ரெயில்களில் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களிடையே 'ரூட் தல' பிரச்சினை இருந்து வருகிறது. 'ரூட் தல'யாக இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக பல மாணவர்கள் உள்ளனர்.

    இவர்களில் யார் பெரியவர்கள் என்பதில் அடிக்கடி மாணவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 'ரூட் தல' விவகாரத்தில் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். அதேபோல் கடம் பத்தூர் ரெயில் நிலையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 'ரூட் தல' பிரச்சினையில் மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஒரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

    கடந்த ஜனவரி மாதம் சமத்துவ பொங்கல் விழாவின்போது திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி -பாரிமுனை வழித்தடத்தில் பயணிக்கும் மாணவர்கள் மோதிக்கொண்டனர். 'ரூட் தல' விவகாரத்தில் மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து வருகிறார்கள். ஆனாலும் எச்சரித்த பிறகும் 'ரூட் தல' மாணவர்கள் மீண்டும் அட்டகாசம் செய்து வருகிறார்கள். பஸ் மற்றும் ரெயில்களில் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு நடைமேடைகளில் கத்தியால் தீப்பொறி பறக்க விட்டும் மாணவர்கள் அட்டூழியம் செய்து வருகின்றனர். இதனால் 'ரூட் தல'யாக செயல்படும் மாணவர்களின் பெற்றோர், வீட்டு முகவரி, உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    'ரூட் தல' மாணவர்களை எச்சரித்தாலும் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களின் நடவடிக்கை குறித்து விளக்கி எச்சரிக்கை செய்து வருகிறோம். மாணவர்களி டம் உறுதிமொழி பத்திரமும் பெற்று வருகிறோம்.

    'ரூட் தல' மாணவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்து விட்டோம். 'ரூட் தல' பிரச்சினையில் குறிப்பாக 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களே ஈடுபட்டு வருகிறார்கள். அந்த கல்லூரிகளின் முதல்வர்களை சந்தித்து பேசி அவர்கள் மூலமாகவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் 'ரூட் தல' மாணவர்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே உறுதிமொழி பத்திரத்தை மீறும் மாணவர்களை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×