search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்- பொதுமக்கள் அச்சம்
    X
    சென்னிமலை நகரில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் சென்ற குரங்கு கூட்டம்.

    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்- பொதுமக்கள் அச்சம்

    • கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.
    • சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து குரங்குகள் பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலைப்பகுதியில ஏராளமான குரங்குகள் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.

    அடிவாரப் பகுதியில் சுற்றி திரிந்த குரங்கு கூட்டம் கடந்த சில நாட்களாக அங்கிருந்து வெளியேறி சென்னிமலை நகருக்குள் நுழைந்து விட்டது. தினமும் குரங்கு கூட்டம் வீடுகளுக்கு படையெடுத்து வருகிறது.

    வீடுகளின் ஜன்னல் திறந்து இருந்தால் உள்ளே நுழைந்து உணவுப் பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் வெயிலில் காயவைக்கும் உணவுப் பொருட்களையும் எடுத்து சென்று விடுகிறது.

    அதோடு இல்லாமல் சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் சென்னிமலை நகருக்குள் குரங்கு கூட்டம் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    உணவுப் பொருட்களை எடுத்து செல்லும் குரங்குகள் தாக்கி விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து இந்த குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×