என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

விழுப்புரம் அருகே நெல்லை வாலிபர் எரித்துக்கொலை- போலீசார் விசாரணை

- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முட்புதரில் இன்று காலை வாலிபர் உடல் எரிந்து அழுகிய நிலையில் காணப்பட்டது.
- விசாரணையில் வாலிபரை மர்ம நபர்கள் எரித்து கொன்று வீசியிருப்பது தெரியவந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முட்புதரில் இன்று காலை வாலிபர் உடல் எரிந்து அழுகிய நிலையில் காணப்பட்டது. அந்த இடத்தில் துர்நாற்றம் வீசியதால் அங்கு சென்றவர்கள் இதனை பார்த்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசிங்கம், புனிதவள்ளி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த வாலிபரை மர்ம நபர்கள் எரித்து கொன்று வீசியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் நெல்லை அருகே கருவந்தா சோலைச்சேரி அம்பேத்கார் தெருவை சேர்ந்த ஆபிரகாம்சாலமன் மகன் பெஞ்சமின் ஆபிரகாம் (வயது 28) என்பது தெரியவந்தது.
இவர் நெல்லையில் இருந்து விழுப்புரத்துக்கு எப்படி வந்தார். பணத்தகராறில் யாராவது கடத்தி வந்து கொலை செய்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.