என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல்லில் மலைக்கோட்டையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- நாமக்கல் நகரின் மத்தியில் ஒரே கல்லில் உருவான மலை மீது மலைக்கோட்டை அமைந்துள்ளது.
- விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மலைக்கோட்டை சென்று உச்சியில் இருந்து நாமக்கல் நகரில் அழகை கண்டு ரசித்து வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் நகரின் மத்தியில் ஒரே கல்லில் உருவான மலை மீது மலைக்கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையகாரரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது. புகழ்பெற்ற ஒற்றைப்பாறையின் உச்சியில் இந்த கோட்டை உள்ளது.
மலையின் கிழக்குபுறத்தில் அங்கநாதர் கோவிலும், மலையில் மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும், மலையை செதுக்கி குடவறை கோவிலாக கட்டப்பட்டு உள்ளன. தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஏராளனமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கிறார்கள்.
மேலும் விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மலைக்கோட்டை சென்று உச்சியில் இருந்து நாமக்கல் நகரில் அழகை கண்டு ரசித்து வருகிறார்கள். பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை நாள் என்பதால் நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் மலைக்கோட்டையில் குடும்பத்துடன் வந்து குவிந்து உள்ளனர்.
அங்கு நின்று நாமக்கல் நகரின் அழகை ரசித்து வருகிறார்கள். இதையொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






