search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிவு
    X

    நாமக்கல் முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிவு

    • ஹைதராபாத் மற்றும் வட மாநிலங்களில் நுகர்வு சரிந்து, கொள்முதல் விலையை குறைத்துள்ளனர்.
    • தைப்பூசம் வர உள்ளதால், முட்டை நுகர்வோர் எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் முட்டை தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் தினமும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கே பண்ணையாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது முட்டை கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, திருவிழா காலங்களில் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி 550 காசாக இருந்த முட்டை விலை 9-ந் தேதி 565 காசாக உயர்ந்தது. இந்த விலை, முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. மேலும் இந்த புதிய விலை 20 நாட்கள் நீடித்தது.

    கடந்த 21-ந் தேதி 20 காசுகள் சரிந்து 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 30 காசு குறைக்கப்பட்டு 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 4 நாட்களில் 50 காசு குறைக்கப்பட்டுள்ளது பண்ணையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

    நெக் நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 50 காசு குறைத்து விற்பனை செய்ய, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய குழு பரிந்துரை செய்கிறது.

    ஆனால் வியாபாரிகள் 85 காசுகள் குறைத்து 420 காசுக்கே கொள்முதல் செய்கின்றனர். மேலும் ஹைதராபாத் மற்றும் வட மாநிலங்களில் நுகர்வு சரிந்து, கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். அவற்றை கருத்தில் கொண்டு நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.

    தைப்பூசம் வர உள்ளதால், முட்டை நுகர்வோர் எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளது. தைப்பூசத்திற்கு மேல் முட்டை மார்க்கெட் சூடு பிடிக்கும். தற்போது உற்பத்தி செலவு மட்டுமே பண்ணையாளர்களுக்கு கிடைக்கிறது. எவ்வித லாபம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் விலையில் மீண்டும் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×