என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிலை அகற்றப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்ட போலீசார்.
அனுமதியின்றி தனியார் கட்டிடத்தில் இருந்த முருகன் சிலை அகற்றம்- போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
- சிலை வைப்பதற்கு அனுமதி இல்லாததால் அந்த இடம் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- சிலை அகற்றம் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றி வருகிறார்கள்.
இந்த பகுதியில் ஒரு சமூகத்திற்குச் சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் சார்பில் முருகன் சிலை வைக்கப்பட்டது.
இந்த சிலை வைப்பதற்கு அனுமதி இல்லாததால் அந்த இடம் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சிலையை எடுத்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று அந்த கட்டிடத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றினர். தொடர்ந்து படிப்பகத்துக்குள் இருந்த முருகன் சிலையை எடுத்து நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
சிலை அகற்றம் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.






