search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி கடாமான் பலி
    X

    சிறுத்தை தாக்கி இறந்து கிடந்த கடாமானை காணலாம்.

    சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி கடாமான் பலி

    • கடந்த 10 நாட்களாக சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மலைப்பகுதியில் கடாமான் ஒன்று சுற்றி வந்தது.
    • வாகன ஓட்டிகளின் ஹாரன் சத்தத்தை கேட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, மான், சிறுத்தை கடாமான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த 10 நாட்களாக சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மலைப்பகுதியில் கடாமான் ஒன்று சுற்றி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கடாமானை சிறுத்தை தாக்கி கொன்று அதன் உடல் பாகத்தை தின்று கொண்டு இருந்தது.

    அப்பொழுது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் ஹாரன் சத்தத்தை கேட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. பின்னர் இதுகுறித்து கடம்பூர் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த கிடந்த கடாமானை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இரவு நேரங்களில் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் தங்களது கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிக்கொண்டு, நல்ல பிரகாசமான வெளிச்சம் கொண்ட ஒளி விளக்குகளை பொருத்திக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி வெளியே நிற்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

    Next Story
    ×