என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அடித்து ஆடும் கே.எஸ்.அழகிரி!
    X

    அடித்து ஆடும் கே.எஸ்.அழகிரி!

    • டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.
    • கே.எஸ்.அழகிரியோ எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை.

    தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே கடினம். வரப்பில் ஏறும் நண்டை மற்ற நண்டு இழுத்து தள்ளுவது போல்தான் கோஷ்டி பூசல் நிகழும்.

    ஆனால் கே.எஸ்.அழகிரியின் அதிர்ஷ்டம் 4 ஆண்டுகளை கடந்தும் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய தலைவர் நியமனம் பற்றி விவாதம் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

    தற்போது பாராளுமன்ற கூட்டம் முடிந்துவிட்டதால் அடுத்தக்கட்டமாக கட்சி மேலிடம் கட்சி பணிகளை கையில் எடுக்கும். எனவே விரைவில் கே.எஸ்.அழகிரி மாற்றப்படுவார் என்ற தகவலை வைரலாக்கி வருகிறார்கள்.

    ஆனால் கே.எஸ்.அழகிரியோ எதைப் பற்றியும் கண்டுகொள்ளவில்லை. களத்தில் நிற்கும் வரை கிடைக்கும் பந்துகளை அடித்து ஆடுவது என்ற பாணியில் தீவிரமாக உள்ளார்.

    வட்டார தலைவர்கள் மாநாடு விரைவில் நடத்தவிருப்பதால் வட்டாரங்களை பிரிக்காதவர்கள் பிரித்து வருகிற 14-ந்தேதி தன்னிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். இதை நிறுத்தி வைக்க டெல்லி சென்று போராடி இருக்கிறார்கள் எதிரணியினர். ஆனால் டெல்லி மேலிடத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காததால் ஆட்டத்தில் தீவிரமாக இருக்கிறார் அழகிரி. 'நான் தலைவராக இருக்கிறேன். எனது பணியை நான் செய்கிறேன்' என்கிறார் கூலாக.

    Next Story
    ×