search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குளச்சல் துறைமுகத்தில் கொம்பன் திருக்கை மீன்கள் விற்பனை அமோகம்
    X

    கொம்பன் திருக்கை மீன்களை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலத்தில் வாங்கி சென்றனர்.

    குளச்சல் துறைமுகத்தில் கொம்பன் திருக்கை மீன்கள் விற்பனை அமோகம்

    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.
    • சுமார் 300 கிலோ கொண்ட திருக்கை மீன்கள் 1 கிலோ ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.நேற்று பைபர் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட சூரை மீன்கள் வழக்கத்தை விடவும் அதிக விலைக்கு போனது. விசைப்படகில் பிடித்துவரப்பட்ட புல்லன் மீன்கள் 1 கிலோ ரூ.150 வரை விலை போனது. இன்று புல்லன் மீன்கள் விலை குறைந்தது ரூ.100-ம், சூரை மீன்கள் 1 கிலோ ரூ.100-ம் விலை போனது.

    இதற்கிடையே இன்று காலை கரை திரும்பிய ஒரு விசைப்படகில் கொம்பன் திருக்கை மீன்கள் திருக்கை மீன்களுக்கு மருத்துவக்குணம் உள்ளதால் மருந்து நிறுவன வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்துச் சென்றனர். சுமார் 300 கிலோ கொண்ட திருக்கை மீன்கள் 1 கிலோ ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.

    கட்டுமரங்களில் பிடித்து வரப்பட்ட நெத்திலி மீன்களின் விலை முதலில் ரூ.1700 வரை விலை போனது. பின்னர் இதன் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

    Next Story
    ×