search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜே.இ.இ. முதல் நிலைத்தேர்வு- கோவை மாணவி தீக்‌ஷா தமிழகத்தில் முதலிடம்
    X

    மாணவி திக்‌ஷா

    ஜே.இ.இ. முதல் நிலைத்தேர்வு- கோவை மாணவி தீக்‌ஷா தமிழகத்தில் முதலிடம்

    • முக்கிய விடைகளைப் பார்த்ததும், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
    • ஜேஇஇ இரண்டாம் கட்ட தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது.

    கோவை:

    மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு முதல் நிலை மற்றும் முதன்மை என இருகட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. ஐஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுவார்கள்.

    இதற்காக நடத்தப்படும் முதல்நிலை தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களில் முதல் இரண்டரை லட்சம் பேர் முதன்மை தேர்வை எழுதலாம். இந்த முதன்மை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

    ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வை எழுத நாடு முழுவதும் இருந்து 8 லட்சத்து 7 ஆயிரம் விண்ணப்பத்து இருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 69 பேர் எழுதினர். 407 நகரங்களில் 588 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

    இதில் 14 மாணவர்கள் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தெலுங்கானாவைச் சேர்ந்த வி.வி.எஸ். ஜஸ்தி யஷ்வந்த், ரூபேஷ் பியானி, அனிகேத் சட்டோபாத்யாய, தீரஜ் குருகுந்தா, ஆந்திராவைச் சேர்ந்த கே.சுஹாஸ், பி. ரவி கிஷோர், பொலிசெட்டி கார்த்திகேயா ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மகேஸ்வரி (அரியானா), குஷாக்ரா ஸ்ரீவாஸ்தவா (ஜார்க்கண்ட்) மிருணாள் கர்க் (பஞ்சாப்), ஸ்னேஹா பரீக் (அஸ்ஸாம்), நவ்யா (ராஜஸ்தான்), போயா ஹர்சென் சாத்விக் (கர்நாடகா), சவுமித்ரா கர்க் (உத்தரபிரதேசம்) ஆகியோரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இந்த தேர்வில் கோவையைச் சேர்ந்த தீக்‌ஷா திவாகர் என்ற மாணவி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 100-க்கு 99.998 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் கோவையில் உள்ள சுகுணா பள்ளியில் பயின்றவர்.

    சாதனை படைத்த மாணவி தீக்‌ஷா திவாகர் கூறுகையில் இவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேர்வு கடினமாக இருந்தது. ஆனால், முக்கிய விடைகளைப் பார்த்ததும், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இப்போது கிடைத்துள்ளது மிக மகிழ்ச்சி என்றார்.

    ஜேஇஇ இரண்டாம் கட்ட தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வு முடிந்தபிறகு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட முதல்நிலை தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட என்.டி.ஏ. கொள்கையின் படி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.


    Next Story
    ×