search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழந்தையின் கைகள் அகற்றம்: டாக்டர்களின் மீது நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
    X

    குழந்தையின் கைகள் அகற்றம்: டாக்டர்களின் மீது நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

    • குழந்தையின் தோள்பட்டை வரை கை அகற்றப்பட்டிருக்கிறது.
    • பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் அவர்களின் ஒன்றரை வயது குழந்தை முகம்மது மகீர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வலது கை அகற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தோள்பட்டை வரை கை அகற்றப்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் செவிலியரின் பாராமுகமான நடவடிக்கைகளுமே அந்த குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இது குறித்து விசாரணை குழு அமைத்திருக்கிறார்.

    தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டிருந்தால் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட அனைவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் நடைபெறா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மருத்துவத்துறை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×