search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியாத்தம் அம்பாலால் வீடுகள், பீடி கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
    X

    குடியாத்தம் அம்பாலால் வீடுகள், பீடி கம்பெனியில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

    • அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.
    • குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

    வேலூர்:

    வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை.

    குடியாத்தம் சந்தைபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

    அதேபோல காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் உள்ள 100-ம் நம்பர் பீடி கம்பெனியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வேலூர் காட்பாடியில் காலை 10 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இரவு 11 மணி வரை அதாவது 13 மணி நேரம் நீடித்தது.

    இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    குடியாத்தம் சந்தைப்பேட்டை அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

    Next Story
    ×