search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லாட்ஜில் விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி: இளம்பெண் பலியான நிலையில் வாலிபருக்கு தீவிர சிகிச்சை
    X

    லாட்ஜில் விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி: இளம்பெண் பலியான நிலையில் வாலிபருக்கு தீவிர சிகிச்சை

    • கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.
    • சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    நாகை மாவட்டம் வடபதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருத்திகா (வயது 26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் பழகி வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் கிருத்திகாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 பேரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கணவன்-மனைவி என கூறி சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அங்கு வைத்து 2 பேரும் ஜாலியாக இருந்தனர்.

    பின்னர் கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். லாட்ஜில் தங்கியிருந்த இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்தனர். இதனால் லாட்ஜின் பொறுப்பாளர் அறைக்கு சென்று வாடகை கேட்பதற்காக சென்றார். அப்போது அறையில் தங்கி இருந்த ஜோடி விஷத்து மயக்க நிலையில் இருந்தனர்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் 2 பேரையும் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கிருத்திகா பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×