என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலோர பகுதிகளில் கன மழை- பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு
- கிழக்கு கடற்கரை சாலை முகத்துவாரம் பகுதிகளான கோவளம், கல்பாக்கம் நகரியம் பகுதிகளில் கால்வாயின் நீர் கடலில் கலந்து வருகிறது.
- திருக்கழுக்குன்றம் பிரிவு பொதுப்பணித்துறையின் 97 ஏரிகள் நிரம்பியுள்ளது.
மாமல்லபுரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும் கன மழையால் பக்கிங்காம் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து, கால்வாய் கடல்போல் காட்சியளித்து வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலை முகத்துவாரம் பகுதிகளான கோவளம், கல்பாக்கம் நகரியம் பகுதிகளில் கால்வாயின் நீர் கடலில் கலந்து வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் 3 நாட்களாக கன மழை பெய்து வருவதால், கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சட்ராஸ், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருக்கழுக்குன்றம் பிரிவு பொதுப்பணித்துறையின் 97 ஏரிகள் நிரம்பியுள்ளது. சென்னை சுற்றுப்புற பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
Next Story






