என் மலர்
தமிழ்நாடு

தொடர்ந்து பலத்த மழை: பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1030 கனஅடியாக அதிகரிப்பு
- கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்து வைத்து சென்னை குடிநீர் தேவைக்காக தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீரை அனுப்புவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மே மாதம் முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவடட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தற்போது பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 1030 கனஅடியாக இருந்தது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லி யன் கனஅடி. இதில் 2586 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
ஏரிக்கு மழைநீர் 650 கனஅடியும், கிருஷ்ணா தண்ணீர் வரத்து 380 கன அடியாகவும் இருந்தது. 480 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 300 கனஅடி அனுப்பப்படுகிறது.