search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் இன்று கடுமையான பனி மூட்டம்- மழைக்கு வீடு சேதம்
    X

    நெல்லையில் இன்று கடுமையான பனி மூட்டம்- மழைக்கு வீடு சேதம்

    • கடுமையான குளிர் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • பரவலாக பெய்துவரும் மழை காரணமாக வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சீனிவாசன் என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சில நாட்களாக பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது நெல்லையில் காலை நேரத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் உள்ளது.

    கடுமையான குளிர் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மாநகரில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதி, வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலைகள், ரெயில்வே மேம்பால பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் இன்று காணப்பட்டது.

    மேலும் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சீனிவாசன்(வயது 50) என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அவர் வடக்கு பைபாசில் உள்ள மருத்துவமனை எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த நேரத்தில் அவர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    Next Story
    ×