search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    15 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்: அதிகபட்சமாக ஈரோட்டில்  108 டிகிரி வெப்பம் பதிவானது
    X

    15 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்: அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி வெப்பம் பதிவானது

    • தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும்
    • வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

    தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 100 டிகிரி வெப்பமும் பதிவானது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

    திருப்பத்தூர் - 107.6, சேலம் - 106.88, வேலூர் - 106.7, கரூர் பரமத்தி - 105.8, தருமபுரி - 104.9, திருச்சி - 104.54, மதுரை விமான நிலையம் - 104.36, திருத்தணி - 104.18, மதுரை நகரம், தஞ்சாவூர் - 104, கோவை - 103.64, நாமக்கல் - 102.2, பாளையங்கோட்டை - 101.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    Next Story
    ×