search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரூர் அருகே ரூ.4 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்கள் கொட்டி அழிப்பு
    X

    கரூர் அருகே ரூ.4 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்கள் கொட்டி அழிப்பு

    • இதுவரை யாரும் அந்த மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல வரவில்லை.
    • 12 வருட காலமாக சுங்கவரி துறையின் குடோனில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலைய சரக்கு முனையம் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த ஒயின் பாட்டில்களை செய்தனர். பின்னர் சுங்கவரி பிரச்சனையில் அந்த நிறுவனங்கள் மதுபாட்டில்களை வாங்கி செல்லாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

    இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என எதிர்பார்த்து 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

    ஆனால் இதுவரை யாரும் அந்த மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல வரவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.

    12 வருட காலமாக சுங்கவரி துறையின் குடோனில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சுங்க இலாக அதிகாரிகள் அந்த வெளிநாட்டு பிராந்தி கம்பெனிகளை தொடர்பு கொண்டு கேட்பாரின்றி கிடக்கும் மது பாட்டில்களின் காலாவதி குறித்து விசாரித்தனர். அப்போது அந்த மதுபான பாட்டில்கள் காலாவதி ஆகிவிட்டது என தெரிவித்தனர். இதையடுத்து மதுபாட்டில்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் அவற்றை கரூரில் உள்ள குப்பை கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக அழிக்கும் பணி நடைபெற்றது.

    இதில் சுமார் 8,000த்துக்கும் அதிகமான ஒயின் பாட்டில்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முழுவதுமாக கொட்டி அழிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட ஒவ்வொரு மது பாட்டில்களின் விலையும் இந்திய ரூபாய் மதிப்புக்கு ரூ.5000 இருக்கும். அவ்வாறு கணக்கிட்டால் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்ட 8000 மது பாட்டில்கள் மதிப்பு ரூ.4 கோடியாகும்.

    Next Story
    ×