என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூடலூர் அருகே அட்டகாசம் செய்த பெண் புலி சிக்கியது
    X

    கூடலூர் அருகே கூண்டுக்குள் சிக்கிய பெண் புலியை காணலாம்

    கூடலூர் அருகே அட்டகாசம் செய்த பெண் புலி சிக்கியது

    • கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    • புலி பிடிபட்டதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுகா, வாகேரி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புலி ஒன்றின் நடமாட்டம் இருந்தது.

    அப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நாய்களை புலி அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது. நாளுக்கு நாள் புலியின் அட்டகாசம் அதிகரிக்கவே கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இந்தநிலையில் அங்குள்ள ஏதன்வாலி தனியார் எஸ்டேட்டில் புலியின் நடமாட்டத்தை பார்த்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைத்தனர். நேற்று மதியம் 12 மணி அளவில் அங்கு வந்த புலி, கூண்டில் சிக்கிக்கொண்டது. பிடிபட்ட அந்த புலி 12 வயதுடைய பெண் புலி ஆகும்.

    வனத்துறை மருத்துவக்குழுவினர் பெண் புலிக்கு மயக்க ஊசி போட்டு வன உயிரின சிகிச்சை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

    புலி பிடிபட்டதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். புலி சிக்கிய கேரள பகுதி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×