search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கயம் சிவன்மலை கோவிலில் லெக்கின்ஸ் அணிந்து செல்ல பெண் பக்தர்களுக்கு தடை
    X

    காங்கயம் சிவன்மலை கோவிலில் லெக்கின்ஸ் அணிந்து செல்ல பெண் பக்தர்களுக்கு தடை

    • முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.
    • துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெக்கின்ஸ் உடையில் பெண்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும்.

    வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பு இந்த கோவிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.

    அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்த பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம்.

    இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும்.

    இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு கோவிலின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் துப்பட்டா இல்லாத உடை மற்றும் லெக்கின்ஸ் உடையில் பெண்கள் கோவிலுக்குள் அனுமதியில்லை என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஆடை கட்டுப்பாடு பற்றி அறியாமல் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×