search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நேரடி கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது- விவசாயிகள் வேதனை
    X

    நேரடி கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது- விவசாயிகள் வேதனை

    • கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் 8 ஆயிரம் நெல் மூட்டைகளும் நனைந்து வீணாகி உள்ளது.
    • அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில நெல்மூட்டைகளை வைக்க போதி இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் அருகே உள்ள வெடால் கிராமத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.

    வெடால் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கடுக்கலூர், கடப்பாக்கம், தென்னேரிபட்டு, ஒத்திவிளாக்கம், வயலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் சுமார் 40 ஆயிரம் நெல் மூட்டை கொள்முதல் செய்யப்பட்டது.

    இதில் 32 ஆயிரம் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பப்பட்டன. மீதம் உள்ள 8 ஆயிரம் நெல்மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே போதிய பாதுகாப்பின்றி திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த பலத்த மழையில் 8 ஆயிரம் நெல் மூட்டைகளும் நனைந்து வீணாகி உள்ளது. மேலும் பல மூட்டைகளில் உள்ள நெல்கள் முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் அனைத்து மூட்டைகளும் வீணாகும் நிலை உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

    எனவே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில நெல்மூட்டைகளை வைக்க போதி இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, நேரடி கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை அரசு சேமிப்பு கிடங்குக்கு மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×