என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உடுமலையில் தக்காளிகளை சாலையில் கொட்டும் விவசாயிகள்
- தக்காளி நடவு செய்த 60வது நாள் முதல் 90 நாட்கள் வரை அறுவடை செய்ய முடியும்.
- தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ. 200 முதல் ரூ.250 வரை விலை போகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கிணறு, போர்வெல் நீர் உள்ள நிலங்களில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை முடிந்து சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாகி உள்ளது. இந்தநிலையில் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி நடவு செய்த 60வது நாள் முதல் 90 நாட்கள் வரை அறுவடை செய்ய முடியும். தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ. 200 முதல் ரூ.250 வரை விலை போகிறது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு என குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது.
வரத்து அதிகமாக இருப்பதாலும் மழையால் தக்காளி அழுகி குறைந்த அளவே கிடைப்பதாலும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் சாலையில் வீசி செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தக்காளி விலை ஒரே சீராக இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளியிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






