search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 5 கோடியாக அதிகரிப்பு
    X

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 5 கோடியாக அதிகரிப்பு

    • துருக்கியில் முட்டை விலை அதிகரித்துள்ளதால், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது.
    • கத்தாரில் அடுத்தவாரம் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. அதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் கத்தாருக்கு வர உள்ளனர்.

    நாமக்கல்:

    தேசிய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. நாமக்கல்லில் இருந்து, 2007-08ம் ஆண்டில், பக்கின், ஓமன், குவைத், கத்தார் உள்ளிட்ட, 11 வளைகுடா நாடுகளுக்கும், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளுக்கும், மாதம்தோறும் 12 முதல் 15 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில் 6 மாதமாக இருந்த காலாவதியை, 3 மாதங்களாக குறைக்கப்பட்டதால் இந்திய முட்டைகள் ஏற்றுமதி செய்வது குறைக்கப்பட்டது.

    மேலும், பறவை காய்ச்சல் நோயற்ற முட்டை உற்பத்தி மண்டலங்கள், இதுவரை இந்தியாவில் ஏற்படுத்தவில்லை, அதன் காரணமாகவும், ஐரோப்பிய நாடுகளில் நிர்பந்தத்தாலும், குவைத், ஈரான், துபாய் போன்ற கல்ப் நாடுகளுக்கு 12 ஆண்டுகளாக முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் தங்களது சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலைக்கு முட்டையை இறக்குமதி செய்து, வளைகுடா நாடுகளுக்கு நிர்பந்தம் செய்ததால், இந்திய முட்டை எற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

    இதன் காரணமாகவும் முட்டை ஏற்றுமதி நடைபெறவில்லை. தற்போது, துருக்கியில் முட்டை விலை அதிகரித்துள்ளதால், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது.

    இதையடுத்து ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், கத்தார், பக்ரின், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு மட்டுமே மாதம்தோறும் 1.50 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக துருக்கி முட்டை கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது. அதனால், குறைந்த விலையில் உள்ள, இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது.

    மேலும், கத்தாரில் அடுத்தவாரம் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குகிறது. அதற்காக, ஏராளமான சுற்றுலா பயணிகள் கத்தாருக்கு வர உள்ளனர். அதனால், முட்டை தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இந்தியாவில் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தற்போது மாதத்துக்கு 5 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதுள்ள கொள்முதல் விலை ஒரே சீராக இருக்கும்பட்சத்தில், ஏற்றுமதியும் வரும், 2023 ஜனவரி வரை நீடிக்கும்.

    மத்திய, மாநில அரசுகள் நாமக்கல் மாவட்டத்தை, பறவை காய்ச்சல் நோயற்ற முட்டை உற்பத்தி மண்டலமாக அறிவித்து சான்றிதழ் வழங்கி, அனைத்து பண்ணையாளர்களும் ஏற்றுமதி செய்யும் வகையில், உருவாக்கி தர வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

    இதன் மூலம் இந்திய முட்டைகள் ஏற்றுமதி முழுவதும் செய்வதற்கு வாய்ப்பாக அமைவதுடன் பண்ணையாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×