search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 6 நாளில் 75 காசுகள் சரிவு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 6 நாளில் 75 காசுகள் சரிவு

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • முட்டை விலை தொடர் சரிவால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில், மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மைனஸ் விலையை தினசரி நெஸ்பாக் அமைப்பு வெளியிடுகிறது. முட்டை கொள்முதல் விலை, அண்டை மாநில விலைக்கேற்ப என்.இ.சி.சி மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில், கடந்த 2022 டிசம்பர் 24-ந் தேதி ரூ.5.50 ஆக இருந்த முட்டை விலை, கடந்த 9-ந் தேதி ரூ.5.65 காசாக உயர்ந்து, முட்டை கொள்முதல் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இந்த புதிய விலை 20 நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த 21-ந் தேதி முட்டை விலை 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை ரூ.5.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 25-ந் தேதி மேலும் 30 காசு குறைக்கப்பட்டு, ரூ.5.15 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முட்டை விலை மீண்டும் 25 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    முட்டைக்கான மைனஸ் விலை, ஒரு முட்டைக்கு 40 பைசா என்று நெஸ்பேக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.4.50 மட்டுமே கிடைக்கும். 6 நாட்களில் ஒரு முட்டைக்கு 75 காசு குறைக்கப்பட்டதால், நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டை உற்பத்தியாகும் நாமக்கல் பகுதி பண்ணையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. முட்டை விலை தொடர் சரிவால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-520, பர்வாலா-470, பெங்களூர்-495, டெல்லி-495, ஹைதராபாத்-490, மும்பை-550, மைசூர்-495, விஜயவாடா-490, ஹெஸ்பேட்-455, கொல்கத்தா-540.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ விலை ரூ.87 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ.89 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×