search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தயாளு அம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை
    X

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தயாளு அம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை

    • தயாளு அம்மாள் அப்பல்லோவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • தயாளு அம்மாளுடன் அவரது மகள் செல்வி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வந்தார்.

    அவருக்கு வயது முதிர்வு காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று தாயார் தயாளு அம்மாளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது டாக்டர்கள் தாயாளு அம்மாள் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்றால் நன்றாக இருக்கும் என்றனர்.

    இதைத்தொடர்ந்து தயாளு அம்மாள் அப்பல்லோவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவரது உடல் நிலை பரவாயில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    தயாளு அம்மாளுடன் அவரது மகள் செல்வி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.

    Next Story
    ×