என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
மரத்தூளால் சந்திரயான்-3, அசோக சின்னம் வரைந்த கோவை பெண்
- தேசத் தலைவர்களின் உருவம், தேசிய சின்னங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
- சந்திரயான் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மரத்தூள்களில் சந்திரயான்-3, லேண்டர், தேசியக்கொடி, அசோக சின்னம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார்.
கோவை:
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கோவையை சேர்ந்தவர் ரேவதி சவுந்தர்ராஜன். இவர் நல்லூர்வயல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதி பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
நுண்கலை ஆர்வலரான இவர் அரிசி, மரத்தூள், வீணாகும் காகிதங்கள் போன்றவற்றில் பாரதியார் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் உருவம், தேசிய சின்னங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சந்திரயான் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மரத்தூள்களில் சந்திரயான்-3, லேண்டர், தேசியக்கொடி, அசோக சின்னம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார். இதனை பெயிண்ட்டை ஊற்றி இந்த ஓவியத்தை வடிவமைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story








