என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே மீண்டும் படகு சேவை- அமைச்சர் எ.வ.வேலு தகவல்
- ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இந்த துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
குஜராத்தின் கெவாடியாவில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழும கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மத்தியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெருந்திறன் கொண்ட பசுமை வளத் துறைமுகத்தை உருவக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இந்த துறைமுகம் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
1980ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த, இந்தியா- இலங்கை இடையேயான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






