search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாம்பஜாரில் கஞ்சா சாக்லேட் விற்ற பீகார் வாலிபர் கைது
    X

    ஜாம்பஜாரில் 'கஞ்சா சாக்லேட்' விற்ற பீகார் வாலிபர் கைது

    • சென்னை ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பீடா கடையில் இருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாடுவதை தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ள கும்பலை சேர்ந்த பலர் சிக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த கடையை ரகசியமாக கண்காணித்து அந்த பீடா கடையில் இருந்து சிலர் ரகசியமாக வாங்கி செல்வதை போலீசார் பார்த்தனர்.

    பின்னர் பீடா கடையில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். கடையில் சோதனை செய்தபோது சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா பொட்டலமாக இல்லாமல் சாக்லேட் வடிவத்தில் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.

    இதையடுத்து பீடா கடை உரிமையாளர் சுரேந்தர் யாதவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஜாம்பஜார் பேலீசார் கைது செய்தனர்.

    மேலும் பீடா கடையில் இருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டையும் பறிமுதல் செய்தனர். சென்னையின் முக்கிய பகுதியான ஜாம்பஜாரில் பீடா கடையில் கஞ்சா விற்பனை ஜரூராக நடந்து வந்துள்ளது. இதே போல மற்ற பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×