search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வெள்ளோட்டம்: திருப்பூர் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    பவானி காலிங்கராயன் வாய்க்கால் நீரேற்று நிலையம் அருகில் வெள்ளோட்டம் நடைபெற்றதை காணலாம்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வெள்ளோட்டம்: திருப்பூர் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

    • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
    • ஒவ்வொரு பகுதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி அடுத்த மாதம் இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அவினாசி:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. ஏறத்தாழ அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில், பவானி காலிங்கராயன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் நீரேற்று நிலையத்தில் இருந்து மோட்டார் மூலம் நீரை இறைத்து 2-வது நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    அதன்பின் 3-வது நீரேற்று நிலையம் என படிப்படியாக வெள்ளோட்டம் பார்க்கப்பட உள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், வெள்ளோட்டம் பார்க்கப்படும் பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறதா, தண்ணீர் செல்வதில் தடை எதுவும் ஏற்படுகிறதா என்பன உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சினைகளை அறிந்து பிரச்சினை இருப்பின் அதை சரி செய்வர்.

    இவ்வாறு ஒவ்வொரு பகுதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி அடுத்த மாதம் இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரேற்று பணியில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அவை களையப்பட்ட பின் அதிகாரபூர்வ வெள்ளோட்ட அறிவிப்பு வெளியாகும் என்றனர். பல ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தற்போது வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது திருப்பூர் மாவட்ட பொதுமக்கள்- விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×