search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2-ம் நூற்றாண்டில் புகழின் உச்சத்தில் இருந்தது- கழுதை தேய்ந்து...500 ஆகி விட்டது
    X

    2-ம் நூற்றாண்டில் புகழின் உச்சத்தில் இருந்தது- கழுதை தேய்ந்து...500 ஆகி விட்டது

    • கழுதைகள் சில இடங்களில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • கழுதைகளால் எழுப்பப்படும் ஒலி தனித்துவம் உடையது.

    சாது, சகிப்புத்தன்மை, தாக்குப்பிடிக்கும் திறன்...

    இந்த மூன்றுக்கும் அடையாளமாக திகழ்வது பஞ்சகல்யாணி என்று அழைக்கப்ப டும் கழுதைகள்தான். குதிரை இனத்தை சேர்ந்த, பாலூட்டியாக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை கேலியாகவே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

    வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ரோமானிய பேரரசில் சுமைகள் சுமப்பது முதல் நீண்ட தூர வர்த்தகம் வரை கழுதைகள் பங்கு மிகப் பெரியதாக இருந்தது. அதேபோல் 2 மற்றும் 5-ம் நூற்றாண்டுகளில் ராணுவத்தின் சேவையிலும் கழுதைகள் பயன்பாடு இருந்துள்ளது. தளவாட பொருட்களை சற்றும் தளராமல் முதுகில் சுமந்து சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    உலகில் தொழில் புரட்சி ஏற்படும் முன்பு பொதுமக்களின் பயணங்களுக்கு குதிரைகளும், பொதிகளை சுமக்க கழுதைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தமிழகத்திலும் சுதந்திரம் அடைவதற்கு முன்பு கழுதைகள் முக்கிய பங்காற்றி வந்தன. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை கொண்டு செல்ல கழுதைகளை அதிக அளவில் பயன்படுத்தினர்.

    இதனால் கிராமங்கள் தோறும் அதிக அளவில் கழுதைகள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் காலப்போக்கில் சலவைத் தொழில் முற்றிலும் மறைந்து போனது. இதன் காரணமாக கழுதைகள் பயன்பாடு வெகுவாக குறைந்தது. இதனால் கழுதைகள் வளர்ப்பில் ஆர்வம் இல்லாமல் பலர் அதனை விற்றுவிட்டனர். தற்போது தமிழகத்தில் கழுதைகள் வெகுவாக குறைந்துவிட்டது.

    தாவர உண்ணியான கழுதையின் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. தனது தாக்குப்பிடிக்கும் திறனால் கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

    பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ. உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலை நிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. கழுதைகளால் எழுப்பப்படும் ஒலி தனித்துவம் உடையது.

    இத்தகைய கழுதை இனங்கள் தமிழகத்தில் வெகுவாக குறைந்திருப்பது வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி 1,983 கழுதைகள் இருந்தது. 2019-ம் ஆண்டு 1,428 கழுதைகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதன் பின் கழுதைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் சென்றிருக்கும் என தெரிகிறது.

    இன்றைய காலத்தில் கழுதைகள் சில இடங்களில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கழுதை பால் மருத்துவ குணம் கொண்டதாலும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படுத்துவதாலும் அதற்கு கடும் கிராக்கி உள்ளது. கழுதை பால் விலை அதிகமாக உள்ளது.

    தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்களில் கழுதைகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள கழுதைகள் தனித்துவம் தன்மை கொண்டது. அதில் வேறு இனங்களை கலந்து இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதனை தடுத்து தமிழகத்தில் கழுதைகளின் இனத்தை அதிகரிக்க மாநில அரசு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×