என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறப்பு திட்ட செயலாக்க துறையின் திட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்
    X

    சிறப்பு திட்ட செயலாக்க துறையின் திட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

    • தமிழக அரசின் சார்பில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • தரவுகள் குறித்து ஆராய இப்போது மாவட்ட வாரியாக சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசின் சார்பில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு திட்ட செயலாகத்துறையின் திட்டங்களின் செயல்பாடுகள், தரவுகள் குறித்து ஆராய இப்போது மாவட்ட வாரியாக சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைகிறதா? முறைகேடுகள் ஏதும் நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்யவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதற்காக நியமிக்கப்பட்ட 37 அதிகாரிகள் மாவட்ட வாரியாக திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், மாதத்தில் 4 நாளாவது மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

    Next Story
    ×