search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் விரைவுபடுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை- அன்புமணி ராமதாஸ் பாராட்டு
    X

    அன்புமணி ராமதாஸ்

    சென்னையில் விரைவுபடுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை- அன்புமணி ராமதாஸ் பாராட்டு

    • நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக்காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.
    • சென்னையில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் 8.40 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்கப்பட்டு இருப்பதால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்தில் இருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்து உள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது.

    நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக்காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். அதற்காகத்தான் எனது பதவிக்காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் 8.40 நிமிடத்திலிருந்து 7 நிமிடமாக குறைக்கப்பட்டு இருப்பதால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்படும்.

    நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும். கிராமங்களில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் சில இடங்களில் 10 நிமிடம் முதல் 30 நிமிடங்களாக (சராசரி 15 நிமிடங்கள்) உள்ளது. இது மேலும் குறைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×