search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    8 பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
    X

    8 பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

    • பதிவுக்கட்டணத்தை விண்ணப்பதாரர் இணைய தளம் வாயிலாக செலுத்தலாம்.
    • இந்த கல்வியாண்டில் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    1. அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர்.

    2. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம்-636 011.

    3. அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி.

    4. அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, காரைக்குடி.

    5. தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர்.

    6. அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர்.

    7. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்.

    8. தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை.

    கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு துவங்கும் நாள்: 04.07.2022. முடிவுறும் நாள்: 03.08.2022.

    பதிவுக்கட்டணத்தை விண்ணப்பதாரர் இணைய தளம் வாயிலாக செலுத்தலாம்.

    இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படி வத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்து டி.எப்.சி. மையங்களிலும் போதிய அளவில் கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த கல்வியாண்டில் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

    மேலும் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.தொடர்பு எண்: 0422-2590080, கைபேசி எண். 9486977757.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×