search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலையில் கேட்பாரற்று கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி: அதிகாரிகள் விசாரணை
    X

    சாலையில் கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள்

    சாலையில் கேட்பாரற்று கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி: அதிகாரிகள் விசாரணை

    • அரிசி மூட்டைகள் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.
    • அரிசி மூட்டைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் உடன் விரைந்து சென்று பார்த்த பொழுது சாலையில் 6 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடைப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த அரிசி மூட்டைகள் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது.

    அந்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்ட பொழுது, அவர் தான் வெளியில் சென்று இருந்ததாகவும் யாரோ மர்ம நபர்கள் கேட்டை திறந்து தனது வீட்டு வாசலுக்குள் போட்டுள்ளதாகவும் இந்த அரிசி மூட்டைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து மொத்தம் 40 கிலோ ரேசன் அரிசியை திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

    ரேசன் அரிசியை வீசி சென்றது யார்? அருகில் உள்ள வீட்டுக்காரருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×