என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குன்னூர் அருகே இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 35 கிலோ பிளாஸ்டிக் கழிவு அகற்றம்
    X

    இறந்த பசுவின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள்

    குன்னூர் அருகே இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 35 கிலோ பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

    • பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை
    • கால்நடையை இழந்துள்ள விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் எடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பை முறையாக அகற்றப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    எடப்பள்ளி, இளித்தொரை, பெட்டட்டி ஆகிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைக் கழிவுகளை உண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்கதையாகி உள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதியில் திடீரென இறந்துபோன பசுவை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அதன் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை பார்த்தனர். உடனடியாக கால்நடை டாக்டர்கள் அதனை அகற்றினர்.

    இதுகுறித்து குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் மனோகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில்,

    பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதையே இது மாதிரியான கால்நடைகளின் இறப்புகள் காட்டுகின்றன. இதற்கு காரணமானவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் கால்நடையை இழந்துள்ள விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×