என் மலர்
தமிழ்நாடு

ன்னூர் ஆட்டுச்சந்ததையில் ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகளை படத்தில் காணலாம்.
அன்னூர் ஆட்டு சந்தையில் குவிந்த வியாபாரிகள்
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் சந்தையில் திரண்டுள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து ஆடு வளர்ப்பையும் செய்து வருகின்றனர்.
அன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.
ரம்ஜான் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், வார இறுதி நாளான இன்று, அன்னூர் சந்தையில் அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. விவசாயிகள் ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சந்தையில் குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடு ஒன்று 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதே போல சந்தையில் நாட்டுக்கோழிகள் மற்றும் இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மேல் விற்பனை நடைபெற்ற நிலையில் இந்த வாரமும் ஒரு கோடிக்கு மேல் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
வாரச் சந்தை களை கட்டியதால் டீக்கடை, ஓட்டல் மற்றும் சிறு கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Next Story