search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட இலைமேடை
    X
    மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட இலைமேடை

    பள்ளி ஆசிரியரின் வீட்டு நிகழ்ச்சிக்கு இலைகளால் மேடையை வடிவமைத்த அரசு பள்ளி மாணவர்கள்

    புதுவை பள்ளி ஆசிரியர் வீட்டு திருமண நிச்சய நிகழ்வில் இலைகளால் செய்த மேடை அலங்காரம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும் தென்னை, பனை மரங்களிலிருந்து விழும் பொருட்களை கலைப்படைகளாக மாற்றி வருகின்றனர்.

    குறிப்பாக பாய்மரக் கப்பல், சைக்கிள், விலங்குகள், நகைகள் செய்து வந்தனர். பல கண்காட்சிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அத்துடன் திருச்சி, சென்னை, புதுவை என பல நகரங்களில் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் இவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர் வீட்டு திருமண நிச்சய நிகழ்வில் இலைகளால் செய்த மேடை அலங்காரம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

    இதுபற்றி நுண்கலை ஆசிரியர் உமாபதி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    கலைப் படைப்புகள் மட்டுமின்றி திருமணம், கருத்தரங்கம் நிகழ்வுகளில் இயற்கை பொருட்கள் கொண்டு விடுமுறை நாட்களில் மேடை அலங்காரமும் செய்ய பயிற்சி தருகிறோம்.

    எங்கள் பள்ளி ஆசிரியர் வீட்டு திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் நாங்கள் அலங்கார மேடை அமைத்தோம். அந்த மேடையை வாழை இலை, தென்னை ஓலை, மந்தார இலை கொண்டு வடிவமைத்தோம்.

    எங்கள் பள்ளியில் 7, 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 5 மணி நேரத்தில் இணைந்து வடிவமைத்தோம்.

    இந்த திருமண நிச்சயதார்த்த மேடை அதிகம் வரவேற்பு பெற்றது. அதை பாராட்டி குழந்தைகளுக்கு புத்தகப்பையை மணமக்கள் வாங்கி தந்தனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×