என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை

    சொந்த ஊர் சென்று வருவதற்கு வசதியாக புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    ஆயுத பூஜையை முன்னிட்டு (வியாழக்கிழமை) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை அரசு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி, காரைக்கால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விஜயதசமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) , நாளை மறுநாள் (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
    Next Story
    ×